|
 |
|
 |
ரோஜாப்பூ கோண்டு
வந்தே எங்கள் ராஜேஸ்வரியை
பூஜை செய்தால் தேசாதி
தேசம் மெச்சும் ஒரு ராஜாப்
போல் வாழச் செய்வாள்
முல்லைப்பூ
கொண்டு வந்தே எங்கள் மோகனாங்கியை
பூஜை செய்தால் இல்லை
என்று சொல்லாமலே தனம் அள்ளி
அள்ளி தந்திடுவாள்.
மருக்கொழுந்து
கொண்டு வந்தே எங்கள் மனோன்மனியை
பூஜை செய்தால் திருக்கோலம்
கொண்டு அங்கே அவள் தினந்தோறும்
வந்திடுவாள்.
ஜாதிப்பூ
கொண்டு வந்தே எங்கள் ஜோதி
அவளை பூஜை செய்தால் ஓதி
உணரா வித்தையெல்லாம்
தந்து மேதை என்று ஆக்கிடுவாள்.
மகிழம்பூ
கொண்டு வந்தே எங்கள் மாதங்கியை
பூஜை செய்தால் மணமாகாத
கன்னியர்க்கு அவள் திருமணமும்
நடத்தி வைப்பாள்.
தாழம்பூ
கொண்டு வந்தே எங்கள் தாஷாணியை
பூஜை செய்தால் வாழாப்
பெண்ணை நாதனுடன் அவள் வாழும் படியாய்
செய்திடுவாள்.
பத்ரம்
பல கொண்டு வந்தே எங்கள் பகவதியை
பூஜை செய்தால் இத்தரைமேல்
உள்ளவர்க்கு புத்ர பாக்யம்
தந்திடுவாள்
தாமரைப்பூ
கொண்டு வந்தே எங்கள் சாமளியை
பூஜை செய்தால் தாமதம்
செய்யாமலே அவள் தாலி பிச்சை
தந்திடுவாள்.
மல்லிகைப்பூ
கொண்டு வந்தே எங்கள் மஹேஸ்வரியை
பூஜை செய்தால் பில்லி
சூனியம் ஏவல் எல்லாம்
அவள் பின்னாலே ஓடச் செய்வாள்.
செண்பகப்பூ
கொண்டு வந்தே எங்கள் அம்பிகையை
பூஜை செய்தால் ஜன் மாந்திர
பாபமேல்லாம் அவள் தீர்த்து
விலக்கி ஓட்டிடுவாள்.
பாரிஜாதம்
கொண்டு வந்தே எங்கள் பார்வதியை
பூஜை செய்தால் பாலா ரூபம்
கொண்டுமே நம் பாபமேல்லாம்
போக்கிடுவாள்.
இருவாட்சி
கொண்டு வந்தே எங்கள் ஹிரன்மயியை
பூஜை செய்தால் மருள்
சூழ்ந்த நெஞ்சினிலே ஞான ஒளி
வீசச் செய்திடுவாள்.
அரளிப்பூ
கொண்டு வந்தே எங்கள் அபிராமியை
பூஜை செய்தால் அளபில்லாத
ஐஸ்வர்யத்தை அவள் அகமகிழ
தந்திடுவாள்.
சம்பரத்தை
கொண்டு வந்தே எங்கள் சண்டிகையை
பூஜை செய்தால் தந்திரமாய்
நம் கனவில் வந்து அவள்
அந்தரங்கம் சொல்லிடுவாள்.
மாதுளம்பூ
கொண்டு வந்தே எங்கள் ஸ்ரீ
மாதாவை பூஜை செய்தால் மங்கள் வாழ்வு
தந்து அவள் மனம் மகிழச்
செய்திடுவாள்
மருதாணிப்பூ
கொண்டு வந்தே எங்கள் மீனாக்ஷியை
பூஜை செய்தால் மாறாத
மனத்துடனே பக்தி பாடல்கள்
பாடச் செய்வாள்.
பாதிரிப்பூ
கொண்டு வந்தே எங்கள் திரிபுரியை
பூஜை செய்தால் அருள்
கூர்ந்து நம்மினுள்ளே
அவள் அனுக்ரஹம் செய்திடுவாள்.
நிலேத்பலம்
கொண்டு வந்தே எங்கள் நீலாயதாக்ஷியை
பூஜை செய்தால் நித்யானந்தம்
கொண்டுமே உலகில் ந்த்த
வாஸம் செய்திடுவாள்.
மனோரஞ்சிதம்
கொண்டு வந்தே எங்கள் மாலினியை
பூஜை செய்தால் குணமான
ஸுகந்தமுடன் அவள் அவர்
மனம் போல வீசச் செய்வாள்.
ஸம்பங்கிப்பூ
கொண்டு வந்தே எங்கள் சர்வேஸ்வரியை
பூஜை செய்தால் சகல செளபாக்யம்
தந்து அவள் சஞ்சலத்தை
நீக்கிடுவாள்.
சாமந்திப்பூ
கொண்டு வந்தே எங்கள் சங்கரியை
பூஜை செய்தால் சக்தியமாயம்
வாழ்வினிலே அவள் சந்தோஷத்தை
அளித்திடுவாள்.
தும்பைப்பூ
கொண்டு வந்தே எங்கள் துர்க்கையை
பூஜை செய்தால் தரித்திரத்தை
துரத்தி அவள் தனதான்யம்
பொழிந்திடுவாள்.
மந்தாரப்பூ
கொண்டு வந்தே எங்கள் லலிதேஸ்வரியை
பூஜை செய்தால் வந்த பாசம்
ஆசை நீங்கி அவள் வந்தனங்கள்
செய்திடுவாள்.
வெட்டிவேர்
கொண்டு வந்தே எங்கள் புவனேஸ்வரியை
பூஜை செய்தால் மட்டில்லாத
மகிழ்ச்சியுடன் அவள் கட்டாயமாய்
கிட்டிடுவாள்.
கதிர்பச்சை
கொண்டு வந்தே எங்கள் காமாக்ஷியை
பூஜை செய்தால் கடைக்கண்ணால்
கடாக்ஷித்தே ஜன்மம் கடைத்தேரச்
செய்திடுவாள்.
*****
|
 |
|
|
 |
|
Kunniyur Sri Kamakshi Amman |
|
 |
|
|
|
Kamakshi devyamba thavardra drushtya, Mooka swayam mooka
kavi ryadaseeth, Thada kuru thwam paramesa jaye, Thwat pada moole pranatham dayardre
|
|
|
 |