தென்னிந்தியா
கோயில்களுக்குப் பிரசித்தி
பெற்றது. அதிலும் குறிப்பாக
தஞ்சை, திருச்சி மாவட்டங்களில்
கோயில்கள் மிகவும் அதிகம்.
பாரத தேசத்திலுள்ள ஸப்த
மோக்ஷபுரிகள் என்று
முக்தி அளிக்கும் ஏழு
தலங்களுள் தென்னிந்தியாவிலுள்ள
ஒரே ஒரு மோக்ஷபுரி காஞ்சியே
ஆகும்.
சுமார் 75 கோயில்களுக்கு
மேல் உள்ள இந்த க்ஷேத்திரம்
'கோயில் நகரம்' (City of Temples) எனப்
பெயர் பெற்றது. காஞிசீபுரத்தில்
எத்தனையோ சிவாலயங்கள்
இருந்தும், காமாக்ஷி
கோயிலைத்தவிர வேறு அம்பாள்
சந்நிதியே கிடையாது.
பார்க்கப்
பார்க்கத் தேவிட்டாத
லாவண்யமும், காருண்யமும்,
நிறைந்த தெய்வத்தாய்
ஸ்ரீகாமாக்ஷி. யுகாந்திரங்களுக்கு
முன் ஹயக்ரீவர், அகஸ்தியர்,
துர்வாஸர் முதலியவர்களும்,
பிற்பாடு ஆதிசங்கர பகவத்
பாதாளும், அதன்பின் மூக
கவியும், மற்றும் எண்ணற்ற
யோகியரும், ஞானியரும்,
பக்தரும், சித்தரும்
பரவி வழிபட்ட பாவனமூர்த்தி
ஸ்ரீகாமாக்ஷி அம்பிகை.
படைத்தல்
- காத்தல் - அழித்தல் - மறைத்தல்
இவற்றுக்கு மேலாக அனுக்கிரகம்
(அருள்) என்கிற ஐந்தாவது
தொழிலும் இருக்கிறது.
பக்தர்களை மாயையிலிருந்து
விடுவித்துத் தன்மயமாக்கிக்
கொள்கிறாளே. அதுதான்அனுக்கிரகம்.
மாயையாக
இருப்பவளும், மாயையைப்
போக்கி, ஐந்தாம் தொழிலான
(மோக்ஷ) அனுக்கிரகத்தைச்
செய்பவளுமான பராசக்தியே
- ஸ்ரீகாமாக்ஷி. இவளை மூக
கவி சில இடங்களில் கறுப்பாளவளாகவும்
(சியாமளாகவிம்) வர்ணிக்கிறார்.
காம
- அன்பு அக்ஷி - கண், அன்பு
பொஙகும் கண்ணை உடையவள்'
'ஸ்ரீகாமாக்ஷி' என்றும்,
ஸ்ரீகாமாக்ஷிக்கு ஸரஸ்வதியும்,
லக்ஷ்மியும் இரண்டு கண்கள்.
'க' என்று பிரம்மாவுக்கு
பேர் - சிவ பத்தினி சிவா
என்பது போல் 'க' வின் பத்தினியான
ஸரஸ்வதிதான் 'கா' 'மா' என்றால்
மஹாலக்ஷ்மி மாதவன் என்றால்
லக்ஷ்மிபதி 'கா' வையும்
'மா' வையும் தன் அக்ஷரங்களாக
(கண்களாக) கொண்டவள் எவளோ
அவளே 'காமாக்ஷி' என்பது
மஹாபெரியவாளின் வாக்கு.
ஸ்ரீகாமாக்ஷி
நான்கு கைகளை உடையவள்.
உன்றில் ஒரு வில்லும்
இன்னொன்றில் ஐந்து அம்புகளும்
இருக்கும். மதுரமான கரும்பு
அம்பாளுக்கு வில்லாக
அமைந்திருக்கும். கூரான
அம்புகளுக்கு பதிலாக,
மிருதுவான மலர்களைப்
பாணங்களாக வைத்திருப்பாள்.
அந்தக்
கரும்புவில் 'மனஸ்' என்ற
தத்துவத்தைக் குறிப்பதாகும்.
மதுரமான மனம் படைத்த
அம்பாள், நம் மனங்களையெல்லாம்
இந்த வில்லைக் காட்டி
வசப்படுத்திக் கொண்டுவிடுகிறாள்.
அவளுடைய ஐந்து புஷ்ப
பாணங்களும் நம் ஐம்புலன்களையும்
ஆகர்ஷித்துச் செயலற்றுப்
போகும்படி செய்வதற்காக
ஏற்பட்டவை.
'மனோ ரூபேக்ஷு
கோதண்டா பஞ்ச தன்மாத்ர
ஸாயகா'
என்று லலிதா ஸஹஸ்ரநாமம்
கூறுகிறது. நம்முடைய
மனோவிருத்தியும், இந்திரிய
விகாரங்களும் அடங்குவதற்கே
பராசக்தியானவள் காமாக்ஷியாகி,
கரும்பு வில்லும், பலர்ப்பாணமும்
தாங்கி வந்திருக்கிறாள்.
மீதி இரண்டு கைகளில்
பாவமும், அங்குசமும்
வைத்திருக்கிறாள். பாசமானது
நம் பாசங்களை, ஆசையை நீக்கி
அவளோடு நம்மைக் கட்டிப்
போடுகிற கயிறு. அங்குசமும்,
நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது
நம்மைக் குத்தி அடக்குவதற்காக,
காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத
தரித்திருக்கிறாள்.
'ராகஸ்வரூப
பாசட்யா க்ரோதாகாராங்கு
சோஜ்வலா'
என்பதாக லலிதா
ஸகஸ்ரநாமத்தில் பாசத்தை
ஆசையாகவும் (ராகம்) அங்குசத்தை
துவேஷமாகவும் (க்ரோதம்)
கூறப்பட்டுள்ளது. இவற்றை
அவை அடக்கி அழிக்கின்றன
என்பது பொருள். அங்குசம்
- இவற்றைத் தரித்துக்
கொண்டு, நிறமே அல்லாத
பிரம்மத்திலிருந்து
செக்கச் செவேல் என்ற
பரம கருணையின் நிறத்தோடு,
உதய சூரியன் மாதிரி, மாதுளம்
பூ மாதிரி, குங்குமப்பூ
மாதிரி, செம்பருத்திப்பூ
மாதிரி காமேசுவரியான
காமாக்ஷி அனுக்கிரக நிமித்தம்
தோன்றியிருக்கிறாள்.
தமிழ்
நாட்டில் பல ஊர்களில்
காமாக்ஷி கொண்டிருக்கிறாள்.
அவைகளுள் ஒன்றுதான் நாகை
மாவட்டத்தில் காவிரியின்
தென்பால் அமைந்த செண்பகாரண்ய
க்ஷேத்திரம். மதுரை க்ஷேத்திரம்
என்று அழைக்கப் பெறும்
மன்னார்குடி நகரின் கீழ்திசையில்
உள்ள, அகஸ்திய நதியின்
வடபாலும், ஹரிச்சந்திர
நதியின் தென்பாலும்,
அமைந்துள்ள 'கன்னிபுரி'
க்ஷேத்திரம் என்னும்
குன்னியூரில் ஸ்ரீ சீதளாபரமேஸ்வரி
என்ற பெயரில் கோயில்
கொண்டிருக்கும் ஸ்ரீகாமாக்ஷி.
ஸ்ரீகாமாக்ஷி
அம்மனின் விக்கிரஹம்
சிறியதானாலும், 'மூர்த்தி
சிறியது. கீர்த்தி பெரியது'
என்பது போல் தனிச் சிறப்பு
பெற்றதாகும். சுமார்
200 ஆண்டுகளுக்கு முன் பூமியிலிருந்து
கிளர்ந்து, எடுக்கப்பட்ட
'ஸ்வயம்பு' மூர்த்தம்.
முதலில்
கீற்றுக் கொட்டகை போட்டு
ஸ்ரீகாமாக்ஷியை பூஜித்து
வந்தார்கள். பிறகு காலக்கிரமத்தில்
கல் கட்டிடம் கட்டி அவ்வப்பொழுது
அதை விஸ்தரித்தும் வந்தனர்.
1932இ 1944 ஆண்டுகளில் கும்பாபிஷேகம்
நடைபெற்றது. அது வரையில்
இதர கிராம கோயில்களில்
பூஜை நடத்துவதைப் போலவே
பூசாரியைக் கொண்டு பூஜைகள்
நடத்தப்பட்டு வந்தன.
அடுத்தடுத்து
பக்கத்து கிராமங்களிலிருந்தும்
ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு
வரமுற்படவே, பூஜை முறைகளை
இன்னும் பெரியதாக விஸ்தரித்து
ஆகம முறைப்படி செய்யும்
நோக்கத்துடன் இதற்கென்று
பிரத்தியேகமாக குருக்களை
(சிவாச்சாரியார்) நியமித்து,
அப்போதிலிருந்து பூஜைகள்,
அர்ச்சனைகள் முதலியவை
முறையாகவும், விஸ்தாரமாகவும்
செய்யப்பட்டு வருகின்றன.
35
ஆண்டுகளுக்குப் பிறகு
1979ல் ஒரு கும்பாகிஷேகம்
நடத்தப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப்
பிறகு மீண்டும் 1996ல் மற்றொரு
கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின்போது
இங்கு நவக்ரஹங்கள் பிரதிஷ்டை
செயதுள்ளதை பக்தர்கள்
ஒரு வரப்ரசாதமாக எண்ணுகிறார்கள்.
குன்னியூர்
கிராமவாசிகள், குன்னியூரைச்
சொந்த ஊராகக் கொண்டு
தற்சமயம் இதர ஊர்களில்
வசிப்பவர்கள், இதர அநேக
பகதர்கள், எல்ரோரது
ஒத்துழைப்பு, பொருளுதவியுடன்,
இப்புனித கைங்கரியம்
நடைபெற்றது.
தமிழ்நாட்டிலுள்ள
கிராமங்களில் 'பச்சை
போடுதல்' என்ற முறை சில
கோயில்களில்தான் இப்போதும்
நடைபெற்று வருகிறது.
வீட்டில் ஏதாவது சுபகாரியம்
நடந்தால் அதை முன்னிட்டு
காமாக்ஷியம்மனை வீடுகளில்
ஏழுந்தருளிவித்தல்தான்
அது. காலையில் கோயிலில்
அபிஷேகம், பூஜை நடத்தப்படும்.
இரவு அம்பாளை (உற்சவர்)
படிச்சட்டத்தில் வைத்து
அலங்காரத்துடன் அந்த
குறிப்பிட்டவர் வீட்டுக்கு
எழுந்தருளச் செய்வார்கள்.
அம்பாள்
முன்பாக ஆறு மரக்கால்
அரிசியை பரப்பி அத்துடன்
தேங்காய், பழ வகைகள், வெற்றிலை,
பாக்கு, புஷ்பம் முதலியவைகளை
வைத்து நைவேத்தியம் செய்வார்கள்.
கிராம
தேவதை காத்தவராயனின்
பிரதிநிதியாக கோயில்
பூசாரி தனது கையில் 'கக்குமாத்தடி'
யை ஏந்திவருவார். இது
ஹனுமாரின் கதையைப் போன்று
மரக்கட்டையில் தலைப்பாகம்
சிறுத்து உருண்டையாக
செய்யப்பட்டது. இதற்கும்
பழம், புஷ்பம் முதலிய
சாமான்களை வைக்கப்படும்.
இவைகளுடன் வேப்பிலைக்
கொத்து, இளநீர், தென்னம்பாளை
குருத்து (பிரித்தது)
- சுருட்டு, புகையிலையும்
காத்தவராயனுக்கு படைக்கப்படும்.
சில ஊர்களில் மது வகைகளும்
வைத்து படைப்பது உண்டு.
இதை 'பள்ளயம்' போடுதல்
என்றும் கூறுவர்.
உடுக்கு
அடிக்க, அடிக்க, பூசாரிக்கு
ஆவேசம் வரும். பக்தர்களின்
கேள்விகளுக்கு, அவர்
அருள்வாக்கு கூறுவார்.
அம்பாளின் ஆவேசத்துடன்
அவர் அருள்வாக்கு கூறுவதை
பக்தர்கள் ஏற்றுக் கொள்வதுடன்
தங்கள் குடும்பத்தில்
அதேமாதிரி நடப்பதையும்
கண்கூடாகக் கண்டு அனுபவித்திருக்கிறார்கள்.
இங்குள்ள
அம்பாள் பூமியில்அடியிலிருந்து
கிடைத்த ஸ்வயம்பு விக்கிரஹம்
ஆதலால், அம்பாள் இருந்த
பூமியில் (தரையில்) அதிர்ந்து
வேகமாக நடக்காமல் மெதுவாக
அடிப்பிரதட்சணமாக நடந்து
வேண்டுதல் செலுத்துவதாகக்
கூறுகிறார்கள்.
கோடைக்காலத்தில்
இக்கோயிலில் தீமிதி
விழா நடத்துகிறார்கள்.
அம்பாளை குடத்துத் தண்ணீரில்
ஆவாஹனம் செய்து, அந்தக்
குடத்தை (கரகம்) மலையில்
சுமந்து அன்றைய தினம்
உபவாஸம் இருந்து தீமிதிநடக்கிறார்
கோயில் பூசாரிக்கு அம்பாளின்
அனுக்கிரகம் இருப்பதால்
அவருக்கு எவ்வித தீப்புண்காயங்களும்
ஏற்படுவதில்லையென்பது
பக்தர்களின் நம்பிக்கை.
பல பக்தர்களும் தீமிதியின்
போது தங்கள் பிரார்த்தனைகளை
குடும்பத்துடன் வந்திருந்து
செலுத்துகிறார்கள்.
விசேஷ
காலங்களில் அம்பாள் அன்ன
வாகனம் அல்லது சிம்ம
வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.
இக்கோயிலில் விநாயகர்,
பாலசுப்பிரமணியம் (முருகன்),
அய்யப்பன் - இவர்களையும்
நாம் தரிசிக்கலாம்.
பக்தர்களுக்கு
அம்பாள் கனவில் தோன்றி
அன்னை சொன்னதைச் சொல்லி
தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்ளில்
சிலவற்றை இங்கு கூரப்பட்டுள்ளது:
1, சென்னை
பக்தர் ஒருவர் தனது மனைவியுடன்
தனது உறவினர் குன்னியூரைச்
சார்ந்தவர். காமாக்ஷியை
குலதெய்வமாக வழிபடுபவர்.
அவருடைய குமாரன் விவாஹத்திற்கு
முன்பு அபிஷேக ஆராதனை
செய்து பச்சை போட வந்த
போது அவரும் மனைவியுடன்
வந்து கலந்துகொண்டு,
பூசாரிக்கு ஆவேசம் வந்து
அருள்வாக்கு கூறும்போது
தன்னுடைய 5 மாத பேரக்குழந்தைக்கு
டாக்டர்கள் இருதய அடைப்பு
சிகிச்சை செய்ய வேண்டும்
என்று கூறியதால் பூசாரியிடம்
அருள்வாக்கு சொல்லும்போது
" மிகவும் சிறிய குழந்தைக்கு
எப்படி இந்த ரணசிகிச்சை
செய்வது என்பது பயமாக
இருக்கிறது. அம்பாள்தான்
தீர்வு சொல்ல வேண்டும்"
என்று கேட்க, பூசாரி "அவசியம்
ரணசிகிச்சை செய்தால்தான்
குழந்தை பிழைக்கும்,
கவலைப்படாமல் ஏற்பாடு
செய். நான் கண்டிப்பாக
காப்பாற்றுகிறேன்" என்று
சொன்னபடி, சென்னையில்
பிரபல இருதய சிகிச்சை
நிபுணரால் அறுவை சிகிச்சை
செய்யப்பட்டு தற்போது
அந்த குழந்தை 6 வயதாகி
நன்றாக இருப்பதாக சொல்கிறார்.
2,
அதேபோல பாண்டியில் வழிபட்டு
இருக்கும் அன்பர் ஒருவரது
மன்னோர்கள் குன்னியூர்
அம்பாளை வழிபட்டு வந்தனர்.
அவர்கள் ஊரைவிட்டு சென்னையுலும்
பாண்டிச்சேரியிலும்
இருந்து வியாபாரம் செய்து
வருவதால் அவர்களுக்கு
தங்கள் குலதெய்வம் காமாக்ஷி
அம்மன் என்று தெரியாத
நிலைமையில் திருப்பதி
பாலாஜியை வழிபட்டுவந்தனர்.
அவர்கள் பையனுக்கு விவாஹம்
நிச்சயிக்கப்பட்டபோது
அம்பாள் அவர்களின் கனவில்
தோன்றி "நான் குன்னியூர்
காமாக்ஷி, உங்கள் குலதெய்வம்,
எனக்குச் செய்ய வேண்டிய
பிரார்த்தனைகளை இதுவரை
செய்யாமல் போனாலும்
இனிமேலாவது என்னை ஆராதியுங்கள்'
என்று சொன்னதால், அவர்கள்
அன்றுமுதல் இன்று வரை
அன்னை காமாக்ஷியை வழிபட்டு
வருகிறார்கள்.
இதேபோல்
எத்தனையோ பக்தர்களுக்கு
அம்பாள் கனவில் தோன்றி
அன்னை சொன்னதைச் சொல்லி
தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை
நினைவு கூர்ந்து மகிழ்வதுடன்
குன்னியூர் காமாக்ஷியை
பல வெளியூர் அன்பர்களும்
வந்து வழிபடுகின்றனர்.
அன்னை காமாக்ஷி ஒரு வரப்பிராசாதி.
அவரவர்கள் வேண்டுதலை
கண்டிப்பாக பூர்த்தி
செய்திடுவாள். ஆகையால்
எல்லோரும் இன்புற்ற
இரக்க அன்னை காமாக்ஷியை
வழிபட்டு பிராத்திப்போம்.
இவ்வூரில்
தொன்றுதொட்டு கோயில்கொண்டிருந்து
அருள் புரிந்து வரும்
ஸ்ரீஆனந்த விநாயகரட,
ஸ்ரீஅபிராமவல்லி சமேத
ஸ்ரீஆனந்தேஸ்வரர் பரிவார
ஆலயங்கள் புதிப்பிக்கப்பட்டு
1996ல் ஜீர்ணோதாரண அஷ்டபந்த
மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீகாஞ்சி
காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
சங்கராசாரிய சுவாமிகள்
மூன்று தடவை (13.1.1996, 8.2.1999, 18.6.1999) இக்கோயில்களுக்கு
விஜயம் செய்து பக்தர்களை
ஆசீர்வதித்தார்கள் என்பதும்
குறிப்படித்தக்கது.
|
 |
|
|
 |
'கோயில் நகரம்'
- City of Temples
|
Sri Kamakshi Amman receives you with all smiles ! |
|
Sri Kamakshi Amman Welcomes you to Kunniyur ! |
|
Kathavarayan in all his Spleandour..Guarding the Amman! |
|
Scenic Beauty of the Temples nearby...... |
|
JayaJaya Sankara Hara Hara Sankara114th Jayanthi Celebrations &Peetarohana Shatabdi of Maha Swamigal |
The Abode of Sri Kamakshi-Kunniyur
|
View of the Amman in the Pragharam.... |
|
 |
|
|